Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாளை மறுதினம் நடக்கிறது ரேஷன் கூறைதீர் கூட்டம்

திருவாரூர், செப். 12: திருவாரூர் மாவட்டத்தில் பொதுவிநியோக திட்ட சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுதினம் நடைபெறுவதாக கலெக்டர் தெரிவித்தார். இதுகுறித்து கலெக்டர் சாரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தினை மேம்படுத்திடும் வகையில் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நாளை மறுதினம் நடக்கிறது. இந்த குறைதீர் கூட்டம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில், திருவாரூர் தாலுக்கா செருகுடி கிராமத்தில் திருவாரூர் ஆர்.டி.ஒ தலைமையில் நடக்கிறது. இதேபோல் நன்னிலம் தாலுக்கா பில்லூர் கிராமத்தில் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குநர் தலைமையிலும், குடவாசல் தாலுகா பெரும்பண்ணையூர் கிராமத்தில் நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் தலைமையிலும், வலங்கைமான் தாலுகா மாளிகைதிடல் கிராமத்தில் திருவாரூர் சரக துணைப்பதிவாளர் தலைமையிலும், நீடாமங்கலம் தாலுகா அய்யம்பேட்டை கிராமத்தில் திருவாரூர் பொது விநியோக திட்ட துணை பதிவாளர் தலைமையிலும், மன்னார்குடி தாலுக்கா தென்பாதி கிராமத்தில் மன்னார்குடி ஆர்.டி.ஒ தலைமையிலும், திருத்துறைப்பூண்டி தாலுக்கா பழையங்குடி கிராமத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலும், கூத்தாநல்லூர் தாலுக்கா காவனூர் கிராமத்தில் மன்னார்குடி சரக துணைப்பதிவாளர் தலைமையிலும், முத்துப்பேட்டை தாலுகா சங்கேந்தி கிராமத்தில் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் தலைமையிலும் அந்தந்த கிராமநிர்வாக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

எனவே தொடர்புடைய பகுதிகளைச்சேர்ந்த பொதுமக்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய மற்றும் நகல் குடும்பஅட்டைகோரும் மனுக்கள் மற்றும் கைபேசி எண் மாற்றம் செய்ய மனுஅளித்து பயன்பெறலாம். அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்கள் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை கோரிக்கை மனு அளித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.