Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நாளை மறுதினம் ஜமாபந்தி துவக்கம்

ஓட்டப்பிடாரம், மே 12: ஓட்டப்பிடாரம் தாலுகா உட்பட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி வரும் 14ம்தேதி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஓட்டப்பிடாரம் தாசில்தார் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவில் வருவாய்த்துறை சார்பில் கிராம கணக்குகளை தணிக்கை செய்யும் பொருட்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வரும் 14ம்தேதி துவங்குகிறது. கலெக்டர் இளம்பகவத் தலைமையில் தாலுகா அலுவலகத்தில் 14ம்தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் ஜமாபந்தியில் எப்போதும்வென்றான் குறுவட்டத்தைச் சேர்ந்த வாலசமுத்திரம், சிந்தலகட்டை, கே.சண்முகபுரம், எஸ்.குமாரபுரம், எப்போதும்வென்றான், ஜெகவீரபாண்டியபுரம், காட்டுநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களுக்கும், 15ம்தேதி எப்போதும்வென்றான் குறுவட்டத்தைச் சேர்ந்த சந்திரகிரி, ஆதனூர், கொல்லம்பரும்பு, கச்சேரி தளவாய்புரம், முள்ளூர் முத்துகுமாரபுரம், மணியாச்சி குறுவட்டத்தைச் சேர்ந்த சவரிமங்கலம், மேலபாண்டியாபுரம் ஆகிய கிராமத்திற்கும் நடக்கிறது.

16ம்தேதி மணியாச்சி குறுவட்டம் ஒட்டநத்தம், மணியாச்சி, சங்கம்பட்டி, அக்கநாயக்கன்பட்டி, கொடியங்குளம், பாறைக்குட்டம், முறம்பன் ஆகிய கிராமங்களுக்கும், 20ம்தேதி பரிவல்லிக்கோட்டை குறுவட்டம் மலைப்பட்டி, பரிவல்லிக்கோட்டை, கொல்லங்கிணறு, மருதன்வாழ்வு, நாரைக்கிணறு, கோவிந்தாபுரம், கீழக்கோட்டை, வேடநத்தம் குறுவட்டத்தைச் சேர்ந்த தருவைகுளம் ஆகிய கிராமத்திற்கும் நடக்கிறது.

21ம்தேதி வேடநத்தம் குறுவட்டம் வேடநத்தம், தெற்கு கல்மேடு, மேல, கீழஅரசடி, புதூர்பாண்டியாபுரம், வேப்பலோடை, பட்டினமருதூர் ஆகிய கிராமங்களுக்கும் 22ம்தேதி வேடநத்தம் குறுவட்டம் மேலமருதூர், டி.துரைச்சாமிபுரம், பசுவந்தனை குறுவட்டம் பசுவந்தனை, கீழமங்கலம், வெங்கடேஸ்வரபுரம், கீழமுடிமன், மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களுக்கும் நடக்கிறது. 23ம்தேதி பசுவந்தனை குறுவட்டம் முத்துராமலிங்கபுரம், குமரெட்டியாபுரம், வெள்ளாரம், பி.துரைச்சாமிபுரம், சில்லாங்குளம், ஓட்டப்பிடாரம் குறுவட்டம் சில்லாநத்தம், தெற்கு வீரபாண்டியபுரம் ஆகிய கிராமங்களுக்கும், 27ம்தேதி ஓட்டப்பிடாரம் குறுவட்டம் சாமிநத்தம், புதியம்புத்தூர், ஜம்புலிங்கபுரம், ஆரைக்குளம், குலசேகரநல்லூர், பாஞ்சாலங்குறிச்சி, ஓட்டப்பிடாரம் கிராமத்திற்கும் நடக்கிறது.

எனவே சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், வருவாய்த்துறை தொடர்பான குறைகள், பட்டா பெயர் மாற்றம், நலத்திட்ட உதவிகள் சம்பந்தமான குறைகளை தீர்க்கும் வகையில் கோரிக்கை மனுகளை ஜமாபந்தி அலுவலரான கலெக்டரிடம் அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.