அரூர், மே 18: அரூர் கோவிந்தசாமி நகரை ஒட்டி கொளகம்பட்டி காப்புக்காடு உள்ளது. வனப்பகுதியிலிருந்து உணவு, தண்ணீர் தேடி, அவ்வப்போது மான்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வாடிக்கையாக உள்ளது. நேற்று முன்தினம், தண்ணீர் தேடி வந்த மானை கண்டு தெருநாய்கள் துரத்தி கடித்தது. அங்கிருந்த பொதுமக்கள் நாய்களை துரத்தி விட்டு, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் வந்து மானை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்தது தெரியவந்தது.
+
Advertisement