நெல்லை, ஜூலை 19: நாங்குநேரி அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அவரை தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி செல்வம் (58).
இவர் மற்றொரு பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு கடந்த இரு நாட்களுக்கு முன்னர் மிட்டாய் வாங்கி கொடுத்து பாலியல் தொந்தரவு செய்தாராம். இதுகுறித்து தெரியவந்த சிறுமியின் பெற்றோர் நாங்குநேரி மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் செல்வம் மீது போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.


