Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நாகப்பட்டினம் குழந்தைகள் காப்பகத்தில் அதிகாரிகள் ஆய்வு வண்டு கிடந்த சுண்டல், அரிசியை அகற்ற உத்தரவு

நாகப்பட்டினம், மே 27: நாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் அன்னை சத்யா குழந்தைகள் காப்பகத்தில் வழங்கப்படும் சுண்டலில் வண்டுகள் இருப்பதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் புஷ்பராஜூக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் வினோதினி முன்னிலையில் நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் குழந்தைகள் காப்பகம் மற்றும் முதியோர் காப்பகம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது இரண்டு இடங்களும் உணவு பாதுகாப்புத்துறை பதிவுச் சான்று பெற்று இருந்தது. சமையலறை மற்றும் உணவு பரிமாறும் இடங்கள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட்டிருந்தது.

தேவையான அளவு உணவு மாதிரி எடுத்து வைக்கவும், உணவை கையாளும் நபர்கள் தன் சுத்தம் கடைபிடிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது. குழந்தைகள் காப்பகத்தில் இருப்பு வைப்பு அறையில் இருந்த சுண்டல் மற்றும் அரிசியில் வண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவற்றை அகற்ற உத்தரவிடப்பட்டது. இனிவரும் காலத்தில் தேவைக்கு ஏற்ப அவ்வப்போது உணவு தயாரிப்பு மூலப்பொருட்கள் வாங்கி பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்த குழந்தைகளிடம் உணவு வழங்குவது குறித்து பேசப்பட்டது. உணவில் குறைபாடுகள் இருந்தால் 9444042322 என்ற உணவு பாதுகாப்பு ஆணையத்தின் வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது.