Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாகப்பட்டினம் அருகே தேவன்குடியில் தேவபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

நாகப்பட்டினம்,ஜூலை13: நாகப்பட்டினம் அருகே தேவன்குடியில் தேவபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாகப்பட்டினம் அருகே தேவன்குடியில் புகழ் பெற்ற தேன்மொழியம்மை உடனுறை தேவபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோவில் குடமுழுக்கு நடந்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் தற்போது திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்த முடிவு செய்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. திருப்பணிகள் முடிவடந்த நிலையில் நேற்று குடமுழுக்கு நடந்தது.

இதை முன்னிட்டு கடந்த 8-ம் தேதி கணபதி, லெட்சுமி, நவகிரக ஹோமங்கள் நடந்தது. தொடர்ந்து 9ம் தேதி பிரசன்னாபிஷேகம், 10-ம் தேதி தீர்த்தம் எடுத்தல், அங்குரார்பணம், முதல் கால பூஜை ஆகியவை நடந்தது. 11-ம் தேதி 2-ம் காலம், பூர்ணாஹீதி, 3-ம் காலம் சுமங்கலி பூஜை, லெட்சுமி பூஜை நடந்தது. நேற்று காலை கடங்கள் புறப்பட்டு விமான குடமுழுக்கும், மூலவர் குடமுழுக்கும் நடந்தது. தொடர்ந்து சாமிக்கு அபிஷேகமும், மகாதீபாராதனையும் நடந்தது.