நாகப்பட்டினம், ஜூலை 14: நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு மாணவர்கள் உண்டியலில் பணம் சேமித்து புத்தகங்கள் வாங்கி பயன்பெற வேண்டும் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் கலந்துகொள்ள உள்ள அனைத்து மாணவர்களுக்கும் உண்டியலில் பணம் சேமிக்கும் பழக்கம் வரவேண்டும்.
தாத்தா, பாட்டி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொடுக்கும் சிறிய தொகையை உண்டியலில் சேர்த்து, அவ்வாறு சேமிக்கப்படும் தொகையை புத்தகத் திருவிழா நடைபெறும் போது மாணவர்கள் புத்தகங்கள் வாங்கி பயன்பெறலாம். வீடுகளில் தங்கள் குழந்தைகள் புத்தகங்கள் வாங்கும் வண்ணம் உண்டியலில் பணம் சேமிப்பது தெரிந்தால் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
அதுபோலவே மாணவர்கள் தங்கள் படிக்கும் பள்ளி வாயிலாக உண்டியலில் தொகை சேமித்து புத்தகங்கள் வாங்கி பயன்பெறலாம். பள்ளி மாணவர்கள் உண்டியலில் பணம் சேமிக்க முன்வர பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஊக்கவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.