நத்தம், பிப். 26: நத்தம்- கொட்டாம்பட்டி சாலை ஆர்.சி பள்ளி எதிரே உள்ள கலைஞர் நூலக வளாகத்தில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்து முதல்வர் மருந்தகத்தை திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமாரசாமி, நகர அவை தலைவர் சரவணன், பேராட்சி மன்ற உறுப்பினர்கள் இஸ்மாயில், ராமு, கூட்டுறவு துறை கள அலுவலர் மருதுபாண்டியன், ஊராளிபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் சிவகுருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

