திருச்செந்தூர், செப். 5: திருச்செந்தூர் மற்றும் ஆழ்வார்திருநகரி ஒன்றியங்களை சேர்ந்த மாணவ, மாணவியருக்கான வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள், ஆசீர்வாதபுரம் பள்ளியில் நடந்தது. 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு இடையிலான கபடி போட்டிகளில் 25 பள்ளிகளை சேர்ந்த அணிகள் விளையாடின. இதில் திருச்செந்தூர் அருகேயுள்ள நடுநாலுமூலைக்கிணறு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று வட்டார அளவிலான சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர். வெற்றி பெற்ற நடுநாலுமூலைக்கிணறு அரசு உயர்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் இல்லாத நிலையில் மாணவர்கள் சாதனை படைத்துள்ளது குறிப்பிட்டதக்கது. வெற்றி பெற்ற அணி வீரர்களை பள்ளி தலைமை ஆசிரியர் மணிசேகர், ஆசிரியர்கள், பெற்றேர், வவுனியா கபடி அணியினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
+
Advertisement