Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தோகைமலை அருகே ஸ்ரீ பகவதிஅம்மன் திருக்கோயில் திருவிழா

தோகைமலை, ஜுன், 4; கரூர் மாவட்டம் தோகைமலை அருகே பொருந்தலூர் ஊராட்சி தெலுங்கப்பட்டியில் பிரசிபெற்ற ஸ்ரீ பகவதிஅம்மன் திருக்கோயில் சாமி கும்பிடும் திருவிழாவை ஒட்டி 6வது நாள் வாஜ்ஜியவர்கள் மண்டகப்படி விழா நடைபெற்றது. பிரசிதி பெற்ற தெலுங்கபட்டி ஸ்ரீ பகவதிஅம்மன் திருக்கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோவில் வளாகத்தில் 2 திசைகளில் பல்லியின் ஒலியின் மூலம் சகுனம் கேட்டு தொடங்குவது வழங்க்கமாக இருந்து வருகிறது. இதேபோல் இந்த ஆண்டு திருவிழாவும் கோவில் வளாகத்தில் 2 திசைகளில் பல்லியின் ஒலியின் மூலம் சகுனம் கேட்டு திருவிழா தொடங்கப்பட்டது.

இந்த திருவிழாவானது கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் மற்றும் கரூர் மாவட்ட எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா, ஆலோசனைப்படி, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் மாணிக்கசுந்தரம் வழிகாட்டுதலின்படி, குளித்தலை டி.எஸ்.பி. செந்தில்குமார், தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆகியோhpன் மேற்பார்வையில் அனைத்து சமூகத்தினரும் ஒருங்கிணைப்போடு தெலுங்கப்பட்டி ஸ்ரீ பகவதிஅம்மன் கோயில் நிர்வாகம் சார்பாக திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் திருவிழாவின் முன்பாக 11 நாள் மண்டகப்பட்டி நிகழ்ச்சிகள் கடந்த 28.5.2025 புதன்கிழமை தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் கடந்த 28ம் தேதி அரண்மனைகாரர்கள், 29ஆம் தேதி பிள்ளைமார்கள், 30ம் தேதி மும்முடியர்கள், 31ம் தேதி வம்மையர்கள், 1ம் தேதி மோடியர்கள் என மண்டகப்படி நிகழ்ச்சிகள் பல்வேறு அலங்காரங்களுடன் சுவாமிகள் ஊர்வலத்துடன் நடைபெற்றது. இதேபோல் 6வது நாள் 2ஆம் தேதி அன்று வாஜ்ஜியவர்கள் மண்டகப்பட்டியானது சுவாமிகள் வீதிஉலாவுடன் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ பகவதிஅம்மனுக்கு திருமஞ்சனம், பால், நெய், திருநீரு, பழவகைகள், குங்குமம், பன்னீர் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர் ஸ்ரீ பகவதியம்மன் உற்சவர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூந்தேரில் தாரை, தப்பட்டை முழங்க,

வானவேடிக்கைகளுடன் நாட்டாமை குமரேசன் முன்னிலையில், விழாக்குழு கணேசன் மற்றும் குழுமக்களின் ஏற்பாட்டில் பொள்ளாச்சி சரவணன், சக்தியின் மேற்பார்வையில், சேலம் கண்ணன், திருச்சி பாரதி, பாலாஜி ஆகியோர் பூந்தேரின் முன்பாக செல்ல ஸ்ரீ பகவதியம்மன் உற்சவர் சுவாமி கோயில் வீட்டிற்கு சென்ற பின்னர், அங்கிருந்து வீதி உலா வந்து மீண்டும் கோவிலில் குடி புகுந்தது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ பகவதிஅம்மன் பரிவார சுவாமிகளுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் தீபாதரனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த மண்டகப்படி விழாவில் வாஜ்ஜியவர்கள் உள்பட அனைத்து சமுதாய பொதுமக்களும் கலந்து கொண்டனர்.