வாழப்பாடி, ஜூலை 1: சேலம் மாவட்டம். வாழப்பாடி அருகே அத்தனுர் பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் முனியன்(46). கூலி தொழிலாளியான இவருக்கு செல்வி(35) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். கடந்த 15.2.2025ம் தேதி இரவு, மது போதையில் வெளியில் சென்ற முனியன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், வாழப்பாடி போலீசார் விசாரித்து வந்த நிலையில், திடீர் திருப்பமாக உறவினர்களே முனியனை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், முனியன் ஓட்டிச் சென்ற பைக் தனியார் விவசாய கிணற்றில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை இன்று எடுத்து விசாரிக்க உள்ளனர்.
+
Advertisement


