தொண்டி, ஜூலை 19: தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட தொண்டி மேற்கு தொடக்கப்பள்ளி 1938ம் வருடம் தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் தற்போது 240க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகிறார்கள். இரண்டு கட்டிடங்களில் 7 ஆசிரியர்களை கொண்டும் இப்பள்ளி இயங்கி வருகிறது. தொண்டியைச் சேர்ந்த அதிகமான மக்கள் இப்பள்ளியில் மாணவ,மாணவிகளை மிகவும் ஆர்வத்தோடு சேர்க்கின்றனர். இப்பள்ளியில் சுற்றுச்சுவர், சிசிடிவி கேமரா, மூலிகை செடி, சுத்தமான குடிநீர், தூய்மையான கழிப்பறை, தரமான கல்வி என அனைத்தும் உள்ளது.
அரசு பள்ளியை அசத்தும் பள்ளியாக பராமரித்து வரும் இப்பள்ளியில் உள்ள மாணவ,மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டிட வசதி கிடையாது. இரண்டு கட்டிடம் மட்டுமே உள்ளதால், தலைமை ஆசிரியர் அறை உட்பட அனைத்து இடங்களிலும் மாணவர்கள் உள்ளனர். இடநெருக்கடியால் மிகவும் சிரமம் அடைகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் பயன்பாடற்ற ஒட்டு கட்டிடம் ஒன்று உள்ளது. அதை இடித்து விட்டு புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


