ஓமலூர், ஜூலை 23: ஓமலூர் வட்டாரத்தில் நாட்டு அத்தி மற்றும் ஹைபிரிட் அத்தி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நாட்டு அத்தி ஆண்டுக்கு 4 முறை காய்ப்பு கொடுக்கிறது. நடப்பு பருவத்தில் நல்ல சீதோஷ்ன நிலை காரணமாக, அதிகளவில் காய்கள் பிடித்துள்ளது. அடி மரத்தில் இருந்து உச்சி மரம் வரை காய்த்துள்ள நிலையில், தொடர் மழைக்கு காய்கள் அழுகியும், சிதைந்தும், மரக்காயாகவும், வெடித்தும் காய்கள் வீணாகிறது. அதனால், காய்கள் பழுக்காமல் வீணாகிறது. சாகுபடி கொடுத்தும் மழையால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்
பட்டுள்ளது.


