நாகர்கோவில், மார்ச் 18:தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரியில் தென்னை சாகுபடி கருத்தரங்கு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக அந்தந்த வட்டாரத்தில் வயல்வெளி செயலாக்கம் நேற்று நடைபெற்றது. அகஸ்தீஸ்வரம் வட்டாரத்தில் தென் தாமரைகுளத்தில் பெருமாள் என்பவரின் தென்னை தோட்டத்தில் ருகோஸ் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறை பற்றியும், தென்னையில் நுண்நூட்டசத்து கலவை பற்றியும் செயல்முறை விளக்கம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட வட்டார தோட்டக்கலை இயக்குநர் ஆறுமுகம் விளக்கமாக எடுத்து கூறினார். இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள், தோட்டக்கலை அலுவலர் தினேஷ், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் தர்மராஜ், நளினி, விமல்ராஜ் பிரினிஷ்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தோட்டக்கலை அலுவலர் ஷிமாஞ்சனா செய்து இருந்தார்.


