தென்காசி, செப்.26: தென்காசி மாவட்ட எஸ்பி சீனிவாசன் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டத்திலுள்ள பல பள்ளிகளில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சட்ட மற்றும் ஒழுங்கு, போதை ஒழிப்பு, குழந்தைகள் மற்றும் பெண்கள், சைபர் குற்றங்கள் மற்றும் சாலை விதிகள் ஆகிய 5 முக்கிய கருத்துகள் மாணவர்கள் பயன்படும்படி புதிய திட்டம் ‘மக்களின் காவலன்’ என்ற பெயரில் துவக்கப்பட்டுள்ளது. தென்காசி இ.சி. ஈஸ்வரன் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே மக்களின் காவலன் விழிப்புணர்வு நிகழ்ச்சி எஸ்பி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்படுத்துக் கொண்டனர். இதே போன்று மாவட்டத்திலுள்ள பல பள்ளிகளிலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
+
Advertisement


