கெங்கவல்லி, ஜூலை 8: சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா, தெடாவூர்-புனல்வாசல் செல்லும் நெடுஞ்சாலையோரம் இரண்டு புறங்களில் பனை மரங்கள் வரிசையாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு, தெடாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில், நெடுஞ்சாலையோரம் இருந்த 10க்கும் மேற்பட்ட பனை மரங்களை மர்ம நபர்கள் இரவோடு, இரவாக வெட்டி கடத்திச் சென்றனர். மேலும், பனை மரங்கள் வெட்டப்பட்ட இடத்தில் இருந்த அடிப்பகுதிக்கு தீ வைத்து எரிய விட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக சாலையோரம், ஏரியின் நீர்வழித்தடத்தில் உள்ள பனை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்துவது அதிகரித்துள்ளது. அதிகாரிகள் மற்றும் போலீசார், பனை மரங்களை வெட்டி கடத்துபவர்களை தடுத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுக்கள் வலியுறுத்துகின்றனர்.
+
Advertisement