சிவகாசி, பிப்.28: சிவகாசியில் தீ விபத்தில் வீட்டை இழந்த பட்டாசு தொழிலாளிக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினார். சிவகாசி அருகே திருத்தங்கல் கேகே நகர் பகுதியைச் சேர்ந்தவர் பட்டாசு தொழிலாளி செல்வராணி(56). இவரது வீட்டில் கடந்த வாரம் காஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் செல்வராணியின் வீடு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
சம்பவம் குறித்து கேள்விப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தீ விபத்து ஏற்பட்ட பகுதியை நேரில் சென்று பார்வையிட்டு செல்வராணிக்கு ஆறுதல் கூறி ரூ.40 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். பகுதி கழக செயலாளர் சரவணக்குமார், தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் பாண்டியராஜன், தலைவர் செல்வம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


