Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தி.மலை) கைலாசநாதர் கோயில் பிரமோற்சவம் தேர் திருவிழா பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் ஆரணியில் சித்திரை பெருவிழா கோலாகலம்

ஆரணி, ஏப். 21: ஆரணியில் கைலாசநாதர் கோயில் பிரமோற்சவம் தேர்த்திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆரணி டவுன் கோட்டை பகுதியில் பழமையான அறம் வளர்நாயகி உடனுரை கைலாசநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்ந ஆண்டு கைலாசநாதர் கோயில் பிரமோற்சவம் தேர்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் அறம்வளர்நாயகி உடனுரை கைலாசநாதர் சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனையுடன் சூரியபிரபை, திருகல்யாணம் பஞ்சமூர்த்திகளுடன் ரிஷபவாகனம், அதிகாரநத்தி, நகாகவாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், நந்திவாகனம், அன்னவாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி திருவீதிஉலா வந்து, பக்கதர்களுக்கு அருள்பலித்து வந்தார்.

மேலும், விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று காலை நடந்தது. அப்போது, கோயில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட அறம்வளர்நாயகி உடனுரை கைலாசநாதர் சுவாமியை தேரில் அமர வைத்து, ஆரணி டவுன் பழைய பஸ்நிலையம், வடக்குமாடவீதி, பெரியக்கடைவீதி சத்தியமூர்த்தி சாலை, காந்திசாலை, புதிய பஸ்நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக தேரோட்டம் நடந்தது. அப்போது, விழாவில், ஆரணி டவுன், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்ந்து பக்கதர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக, நகரமன்ற தலைவர் ஏ.,சி.மணி, எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன், தொழிலாளர்களின் பிரதிநிதி அன்பழகன், மாவட்ட பொருளாளர் தட்சணாமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர் கனிமொழி சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து விழாவை தொடங்கி வைத்து சுவாமி தரிசனம் செய்தனர். இதில் இந்து அறிநிலையத்துறை செயல் அலுவலர் சிவாஜி, விழாக்குழு தலைவர் சம்பத் உட்பட அதிகாரிகள், பொதுமக்கள் உடனிருந்தனர். மேலும், திருவிழாவின்போது, மருத்துவ குழுவினர், ஆரணி தீயணைப்பு துறை நிலை அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள், ஆரணிடவுன் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கேப்சன்....ஆரணியில் கைலாசநாதர் கோயில் பிரமோற்சவ தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்த கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.