Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

(தி.மலை) ஆர்வத்துடன் வாக்களித்த பெண் வாக்காளர்கள் கலசபாக்கம் தொகுதியில்

கலசபாக்கம், ஏப். 21: கலசபாக்கம் தொகுதியில் பெண் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். இந்திய மக்களவையின் 18 வது பொது தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. அதன் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியில் 281 வாக்குச்சாவடி மையங்களில் 122 982 ஆண் வாக்காளர்கள் 126 839 பெண் வாக்காளர்கள் மூன்றாம் பாலினம் 12 என 249 833 வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

நேற்று முன்தினம் காலையில் கலசபாக்கம் தொகுதியில் பெரும்பாலான வாக்குச்சாவடி மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும் மாலையில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குப்பதிவு சூடு பிடித்தது. கலசபாக்கம் தொகுதியில் 92 276 ஆண் வாக்காளர்கள், 94 629 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினம் 5 என 186 910 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். 72.99% வாக்குகள் கலசபாக்கம் தொகுதியில் பதிவாகியுள்ளது. ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் வாக்களிப்பதில் கூடுதல் ஆர்வம் செலுத்தியதால் 2353 பெண் வாக்காளர்கள் ஆண் வாக்காளர்களை விட கூடுதலாக வாக்குகள் செலுத்தியுள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் வாக்குச்சாவடி மையங்களில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் விடிய விடிய திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.