Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திறன் வளர்ப்பு பயிற்சி நடத்த வேண்டும் விராலிமலை முருகன் மலைக்கோயில் லிப்ட் சுவற்றில் வண்ண வண்ண கலரில் மூலவர் சித்திரம்

விராலிமலை, ஜூன் 27: விராலிமலை விராலிமலை முருகன் மலைக்கோயிலில் மின் தூக்கியின் வெளிப்புற சுவற்றில் மூலவர் மருகன் சித்திரம் தனியார் பங்களிப்புடன் தீட்டப்பட்டு வருகிறது. பணிகள் வரும் நாட்களில் முடிய உள்ள நிலையில் விரைவில் பக்தர்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் அமைந்துள்ள 207 படிகள் கொண்ட முருகன் மலைக்கோயில் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற புனித தலமாகும் அதோடு, அஷ்டாமாசித்தி எனும் கூடுவிட்டு கூடுபாயும் வித்தையை அருணகிரிநாதருக்கு முருகன் இத்தலத்தில் கற்றருளியதாக தல வரலாறுகள் கூறுகின்றன.

இம்மலைமேல், ஆறு முகங்களுடன் சுப்பிரமணியர் வள்ளி,தெய்வானை சமேதராக ஆறுமுகங்களுடன் மயில் மேல் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அறுபடை வீடுகளுக்கு இணையாக கருதப்படும் இந்த மலைக்கோயில் மேலே செல்ல படிகளில் மட்டுமே ஏறி செல்லவேண்டி முன் காலத்தில் இருந்த நிலையில் சுமார் ரூ.3.80 கோடி ரூபாய் மதிப்பில் அடிவாரத்தில் இருந்து மலைமேல் உள்ள இடும்பர் கோயில் சன்னதி வரை சுமார் 360 மீட்டர் நீளத்தில் 7 அடி அகலத்தில் தார்சாலை அமைக்கப்பட்டு கடந்த 2021ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த சாலை முடியும் இடத்தில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் இருந்து வயதான பக்தர்கள், மாற்றுத்திறனாளிகள் மணிமண்டபம் வரை செல்லும் வகையில் 2 லிப்ட் அமைக்கப்பட்டு ஒரு லிப்ட்டில் 8 பேர் என ஒரே நேரத்தில் 16 பேர் வரை பயணம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், மின் தூக்கி சுற்றுச்சுவரை மேலும் அழகு படுத்தும் நோக்கில் தனியார் பங்களிப்போடு வண்ண வண்ண கலர்களில் வள்ளி,தேவசேனா சமேத முருகன் சித்திரம், மலைக்கோயில் படம் வரையப்பட்டு வருகிறது.வண்ணம் தீட்டும் பணிகள் வரும் நாட்களில் முடிவடையும் நிலையில் மின்தூக்கி விரைவில் திறக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக அறநிலையத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.