Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருவாரூர் மடப்புரம் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே வாழை இலையில் கிருஷ்ணர் ஓவியம் 10, 12ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் பட்டப்படிப்பு

திருவாரூர், ஆக. 27: திருவாரூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் பட்டபடிப்பு மற்றும் பட்டயபடிப்பு பயில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

சென்னை தரமணியிலுள்ள இன்ஸ்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி அன்ட் அப்ளைடு நியூட்ரிசியன் நிறுவனமானது ஒன்றிய அரசின் சுற்றுலாதுறையின் கீழ் அமைய பெற்றதும், சர்வதேச அங்கீகாரம் பெற்றதும் ஆகும். இந்நிறுவனத்தில் 12ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்கள் பி.எஸ்சி ஹாஸ்பிட்டலிட்டி அன்ட் ஹோட்டல் அட்மினிஸ்டேசன் 3 வருட முழுநேர பட்டபடிப்பு, ஒன்றரை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு பட்டயப்படிப்பு, 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றறை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினைஞர், உணவு மற்றும் பானசேவையில் கைவினைத்திறன் படிப்பு, பேக்கரி மற்றும் மிட்டாய் துறையில் பட்டயப்படிப்பு ஆகிய பிரிவுகளில் சேர்ந்து படித்திடலாம்.

படிப்பு முடிந்தவுடன் நட்சத்திர விடுதிகள், விமானம் நிறுவனம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர் தர உணவகங்கள் போன்ற இடங்களில் வேலைவாய்ப்பு பெற்றுதரப்படும். இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருக்கவேண்டும். 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்கவேண்டும். இப்படிப்பிற்கான செலவினம் தாட்கோவால் ஏற்கப்படும். ஆரம்பகால மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரைபெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை ஊதியம் பெறலாம்.

எனவே, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயனடையுமாறும், மேலும் விவரங்களுக்கு நாகை பைபாஸ் ரோட்டில் இயங்கி வரும் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரில் தொடர்புகொண்டு பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.