குலசேகரம், நவ.29: தோட்டவாரம் சிக்மா விளையாட்டு மற்றும் கலை மன்றம் சார்பாக திருவட்டார் பேரூராட்சிக்கு உட்பட்ட மரூர் குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பனை மர கன்றுகள் நடப்பட்டது. இதனை திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலா ரமேஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு திபோர்சியஸ் தலைமை வகித்தார். இதில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement


