திருவட்டார், மே 21: திருவட்டார் அருகே ஆற்றூர் ஆர்சி தெருவை சேர்ந்தவர் விஜூ (36) ஆட்டோ டிரைவர். இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் தந்தை, தாய், தம்பி ஆகிய 3 பேரும் வெளியே சென்றிருந்தனர். வீட்டில் தனியாக இருந்த விஜூ படுக்கையறையில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்டுள்ளார். அவரை மீட்டு ஆற்றூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனை செய்து பார்த்த போது ஆட்டோ டிரைவர் விஜூ ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக விஜூவின் தாய் ராஜம் திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement

