குலசேகரம், நவ.16: திருவட்டார் போலீசார் நேற்று முன்தினம் மாலை வேர்கிளம்பி சந்திப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக டெம்போ ஒன்று வந்தது. போலீசாரை கண்டதும், டெம்போவை ஓட்டி வந்த டிரைவர் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீசார் லாரியை சோதனை செய்த போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி எம்.சாண்ட் கடத்தி வந்தது தெரியவந்தது. பின்னர் எம்.சாண்டுடன் டெம்போவை பறிமுதல் செய்த போலீசார் அதனை திருவட்டார் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டெம்போ உரிமையாளர் மற்றும் டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement