ஊத்தங்கரை, பிப்.7: கிருஷ்ணகிரி மாவட்டம். ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு இந்திரா நகரை சேர்ந்தவர் சதீஷ் (38). இவரது மனைவி சத்யா (34), போச்சம்பள்ளியில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். கடந்த 3ம் தேதி வேலைக்கு சென்ற சத்யா, மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி சதீஷ், ஊத்தங்கரை போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
+
Advertisement


