Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருமங்கலம் அருகே கிராமத்தில் புகுந்த புள்ளிமான்

திருமங்கலம், மே 20: திருமங்கலம் அருகே வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த புள்ளிமானை மீட்ட கிராமக்கள் வனத்துறையினர் ஒப்படைத்தனர். திருமங்கலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள ராயபாளையம், மீனாட்சிபுரம், அச்சம்பட்டி, கிழவனேரி, திரளி, சிவரக்கோட்டை, கள்ளிக்குடி, நேசனேரி, செங்கபடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கண்மாய் கரைகளில் புள்ளிமான்கள் அதிகளவில் வசிக்கின்றன. இவை அவ்வப்போது இரை தேடியும், தண்ணீர் அருந்தவும் கிராமங்களுக்கு வருவது வழக்கம்.

அப்படி வரும் மான்களை நாய்கள் துரத்தி கடித்து காயப்படுத்துவதும், சில நேரங்களில் இந்த தாக்குதலில் மான்கள் உயிரிழப்பதும் நடக்கிறது. இந்தநிலையில் நேற்று திருமங்கலம் அருகேயுள்ள அச்சம்பட்டி கிராமத்திற்குள் சுமார் ஒன்றரை வயது புள்ளிமான் வழிதவறி வந்தது. மானை கண்ட நாய்கள் குரைத்தபடி துரத்தவே, கிராமமக்கள் அவற்றை விரட்டி புள்ளிமானை பாதுகாப்பாக மீட்டு கட்டிவைத்தனர். இது குறித்து திரளி விஏஓ சுகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்து புள்ளிமான் குறித்து உசிலம்பட்டி வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அங்கு வந்த வனத்துறையினர் புள்ளிமானை மீட்டு சென்றனர்.