Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்பரங்குன்றம் லட்சுமி தீர்த்தக்குளத்தில் சென்னை ஐஐடி நிபுணர் குழுவினர் ஆய்வு

திருப்பரங்குன்றம், ஆக. 28: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலின் உள்ளே லட்சுமி தீர்த்தகுளம் உள்ளது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த குளம் மிகவும் தொன்மையானது. இங்குள்ள மீன்களுக்கு பொரி வழங்கி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மழை காலத்தில் இந்த குளத்தின் பக்கவாட்டு சுவர் சேதமடைந்தது. இந்நிலையில் பக்தர்கள் இந்த குளத்தை சீரமைக்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு லட்சுமி தீர்த்த குளத்தை சீரமைக்க தமிழ்நாடு அரசு ரூ.6.5 கோடி ஒதுக்கியது. இதனைத்தொடர்ந்து கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ம் தேதி இந்த குளத்தை சீரமைக்க பூமி பூஜை துவங்கி பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த குளத்தை ஒட்டிய பகுதியில் விநாயகர் கோயில் உள்ளது. மேலும் அதனருகில் நூற்றாண்டு பழைமையான மண்டபமும் உள்ளது. தற்போது சீரமைப்பு பணிகளின் போது பழமை மாறாமல் புதிய தொழில்நுட்பத்துடன் சுவர் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக நேற்று சென்னை ஐஐடி பேராசிரியர் டாக்டர் அழகு மூர்த்தி தலைமையில் நிபுணர் குழு லட்சுமி தீர்த்த குளத்தின் மேற்குப் பகுதியில் உள்ள சுவற்றின் அருகில் உள்ள விநாயகர் கோயில் பகுதியை நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டு, பழமை மாறாமல் புதிய தொழில்நுட்பம் கொண்டு கட்டிடத்தை கட்டி முடிக்க தேவையான வழிமுறைகளை ஆராய்ந்தனர். அப்போது மண்டல உதவிகோட்ட பொறியாளர் மற்றும் கோயில் இளநிலை பொறியாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.