Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருச்சி இனாம்குளத்தூரில் ரயில்வே தண்டவாளத்திற்கு அடியில் கேபிள் மூலம் மின்விநியோகத்திற்கு நிதி: அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவு

திருச்சி, ஜூன் 5: திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் மக்களின் 7 வருட மின்வாரிய கோரிக்கை, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களின் தொடர் முயற்சி காரணமாக நிறைவேறியுள்ளது.

திருச்சி நாடாளுமன்ற தொகுதி, திருவரங்கம் வட்டம், மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூரில் ரயில்வே கோரிக்கை மனு ஆய்விற்காக திருச்சி எம்.பி. துரை வைகோ நேற்று அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களின் ரயில்வே மேம்பால கோரிக்கைக்கான இடத்தை ஆய்வு செய்துவிட்டு வரும்போது, பொதுமக்கள் தரப்பிலிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை அவரிடம் கொடுத்தனர். அதில், இனாம்குளத்தூர் பெரிய பாசன ஏரி பெரிய சிறு மற்றும் குறு விவசாயிகள் பயனீட்டாளர்கள் சங்கத்தினர் தலைவர் எம்.ஆசாப் அலி தலைமையில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், அம்மாபேட்டை துணை மின் நிலையத்தில் இருந்து ரயில்வே கேட் அடுத்துள்ள ரஹமத்நகர், அண்ணாநகர், புதுக்குளம், கடப்பட்டி, ராஜாகாட்டுப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு ரயில்வே தண்டவாளங்களுக்கு அடியில் கேபிள் மூலமாக மின் விநியோகம் இருந்து வந்தது. 2018ம் ஆண்டு பெரும் சீற்றத்துடன் வீசிய கஜா புயலின் போது, கேபிள் வழியாக சென்ற மின் விநியோகம் பாதிப்புக்குள்ளானது. அப்போது, புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை துணை மின் நிலையத்திலிருந்து இடைக்கால ஏற்பாடாக மின்சாரம் வழங்கப்பட்டது. அது இன்றளவும் தொடர்கிறது. ஆனால் இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால், மருத்துவமனை, பள்ளி செயல்பாடுகள் பாதிப்படைகிறது. வணிகர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.

எனவே, பழைய நடைமுறையின்படி, அம்மாபேட்டை துணை மின் நிலையத்தில் இருந்து, ரயில்வே தண்டவாளங்களுக்கு அடியில் கேபிள் வழியாக மின்விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அம்மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இதனிடையே, மனுதாரர்களின் கோரிக்கை மூன்று மாதமாகியும் தீர்க்கப்படாததை அறிந்த எம்.பி.துரை வைகோ மின்வாரிய அதிகாரிகளுக்கு போதிய அழுத்தம் கொடுத்த நிலையில், ரயில்வே தண்டவாளம் வழியாகச் சென்ற பழைய கேபிள் மின் விநியோகப் பாதையை மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இறுதியாக ஆலோசனையின் முடிவில் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் செல்வி, பழைய நடைமுறையின்படி கேபிள் மூலம் மின்சாரம் வழங்கிட திட்ட மதிப்பீடு செய்து, மதுரை கோட்ட ரயில்வே துறையிடம் அனுமதி பெற்று, விரைந்து பணியை முடித்துத் தருவதாக உறுதியளித்தார்.

மேலும் பழைய நடைமுறையின்படி கேபிள் மூலம் மின்சாரம் வழங்கிட திட்டமதிப்பீடு செய்து உயர் அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பி இருப்பதாகவும், எப்படியும் ஒரு மாத காலத்தில் நிதி ஒதுக்கும் பணிகள் முடியும். அதன்பிறகு ரயில்வே துறையிடம் அனுமதி பெற்று பணிகள் துவங்குவோம் என்றார். இதையடுத்து மின்வாரிய அதிகாரிகளுக்கு அப்பகுதியினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

தங்கதேர் குறித்து அறிவிப்பு பலகை அமைச்சர் சேகர் பாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

சமயபுரம் மாரியம்மன் கோயில் கோபுரத்தில் வண்ணவிளக்குகள் அமைக்கும் பணி நிறைவடைந்து துவக்கிவைக்கப்பட உள்ளது. திருவானைக்கோயில் ஜம்புகேஷ்வரர், அகிலாண்டேஷ்வரி கோயிலில் உள்ள தங்கதேர் குறித்து பக்தர்களுக்கு தெரிவிக்க ஏதுவாக அறிவிப்பு பலகைகள் வைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயிலில் உள்ள பசுமடம் மற்றும் யானை கொட்டாறைத்தை தூய்மையாக பராமரிக்க அறிவுறுத்தி உள்ளேன். மேலும் கோயிலில் சிறிய அளவிலான மராமத்து பணிகளையும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தரவும் அறிவுறுத்தியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.