Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருச்சியில் ஜூன் 27ம்தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்

திருச்சி, ஜூன் 25: திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், மையத்தின் அலுவலக வளாகத்தில் நடத்தப்படவுள்ள சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு, வேலை நாடுநர்கள் பயனடைய மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

திருச்சி மாவட்டத்திலுள்ள வேலை நாடுநர்களை தனியார் துறைகளில் பணியமா்த்தும் நோக்கத்துடன், திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், வரும் ஜூன் 27ம் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாயப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் தொழில் துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை உள்ளிட்ட பல்வேறு தனியார் துறைகளை சார்ந்த 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள், தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தோந்தெடுக்கவுள்ளனர்.

மேலும், இதில் மாவட்டத்திலுள்ள திறன் பயிற்சி நிறுவனங்களும் கலந்து கொண்டு, இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தோவு செய்யவுள்ளனர். இத்தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ்-2, ஐ.டி.ஐ, இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள் மற்றும் பொறியியல் படிப்புகள் போன்ற கல்வித்தகுதிகளுடைய 18 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்ட வேலை நாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுய விவரக்குறிப்பு (BIO-DATA), அனைத்து கல்விச்சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம். இந்த தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில், ஒரே இடத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்களின் நேர்காணலில் கலந்து கொண்டு, வேலை நாடுநர்கள் தாங்கள் விரும்பும் வேலை வாய்ப்பை பெற இது ஒரு நல்ல வாய்ப்பு என்பதால், திருச்சி மாவட்ட வேலை நாடுநர்கள் ஜூன் 27 அன்று காலை 10.30 மணி முதல் திருச்சி, கண்டோன்மென்ட், பாரதிதாசன் சாலை, மேற்கு தாலுகா அலுவலகத்தின் பின்புறம் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் வந்து முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இதுகுறித்த மேலும் தகவல்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 0431-2413510, 94990-55901 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.