திருச்சி, ஜூலை 14: திருச்சியில் 2 இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி, உய்யகொண்டான் திருமலை, சண்முகா நகரை சேர்ந்தவர் கணேஷ்(31). இவர் கடந்த 10ம் தேதி தன் பைக்கை மத்திய பேருந்து நிலையம் அருகே நிறுத்திவிட்டு சென்றார். அன்று இரவு வேலை முடிந்து வந்து பார்த்தபோது அங்கிருந்து பைக் திருடு போனது தெரிய வந்தது.
இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி, வடக்கு ஆண்டார் வீதி, கணபதி ஐயர் சந்தை பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி(70). இவர் கடந்த 4ம் தேதி தன் மொபட்டை தன் வீட்டின் அருகே நிறுத்திவிட்டு உறங்கச் சென்றார். மறுநாள் காலை அங்கிருந்து மொபட் திருடுபோனது தெரிந்தது. இது குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


