Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருக்குறுங்குடியில் தொழுநோய் ஊனத்தடுப்பு முகாம்

களக்காடு, நவ.22: களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழுநோய் ஊனத்தடுப்பு முகாம் நடந்தது. இதில் வட்டார மருத்துவ அதிகாரி பிரியதர்ஷினி தலைமை வகித்தார். முகாமில் துணை இயக்குநர் அலுவலக நலக்கல்வியாளர் பாலசுப்பிரமணியன், சீனிவாசன், சேவைகள் அறக்கட்டளை கள இயக்குனர் லெட்சுமிநாராயணன், மருத்துவமனை வெங்கடேசன், மருத்துவமல்லா மேற்பார்வையாளர் சந்திரமோகன், இசக்கிமுத்து, கண் மருத்துவ உதவியாளர் செல்வராஜன், முடநீக்கியல் வல்லுனர் கவிதா உள்பட பலர் நோய் தடுப்பு முறைகள் குறித்து விளக்கினர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. காலணிகள், ஊனத்தடுப்பு உபகரணங்கள், மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வட்டார மருத்துவமல்லா மேற்பார்வையாளர் சிதம்பரம், சுகாதார ஆய்வாளர்கள் அலுவலக உதவியாளர்கள், பணியாளர்கள், திருக்குறுங்குடி சீனிவாச சேவைகள் அறக்கட்டளை பணியாளர்கள் செய்திருந்தனர்.