திருக்காட்டுப்பள்ளி, டிச. 3: திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருக்கானூர் சிவன் கோயிலில் கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடந்தது. திருக்காட்டுப்பள்ளி அடுத்த திருக்கானூரில் செளந்தரநாயகி சமேத கரும்பேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில், நேற்று மூன்றாவது சோம வாரத்தை முன்னிட்டு 108 சங்குகளால் ஆன சிறப்பு பூஜைகள் நடந்து சுவாமி, அம்பாளுக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர். ஏற்பாடுகளை செம்மேனிநாதன், குமார், விவேகானந்தன் சிவாச்சாரியார் மேற்கொண்டிருந்தனர்.
+
Advertisement