Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருக்களம்பூர் கொடியேறி அம்மன் கோயிலில் 40ம் ஆண்டு பூச்சொரிதல் விழா: திருவெறும்பூர் அருகே காணாமல் போன பெண் மீட்பு

திருவெறும்பூர், மே 15: திருவெறும்பூர் அருகே வாழவந்தான் கோட்டை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இருந்து காணாமல் போன பெண்ணை துவாக்குடி போலீசார் மீட்டு கணவரிடம் ஒப்படைத்தனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தை சேர்ந்தவர் தயாளன் இவரது மனைவி தமிழ் மொழி (32) இவர் கடந்த 12ஆம் தேதி வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து கணவர் தயாளன் துவாக்குடி போலீசில் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் துவாக்குடி சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் காவலர் மகேஷ் ஆகியோர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தமிழ்மொழி தஞ்சாவூர் வல்லம் மெடிக்கல் காலேஜ் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தமிழ்மொழியை மீட்டு அழைத்து வந்து அவரது கணவர் தயாளனிடம் ஒப்படைத்தனர்.