Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தியாகராஜ சுவாமி கோயிலின் ஆடிப்பூர உற்சவ பெருவிழா கமலாம்பாள் தேர் கட்டும் பணி மும்முரம்

* ஆகஸ்ட் 6ம் தேதி தேரோட்ட விழா

திருவாரூர், ஜூலை 31: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் ஆடிப்பூர உற்சவ பெருவிழாவை முன்னிட்டு வரும் 6ம் தேதி நடைபெறும் கமலாம்பாள் தேரோட்டத்திற்காக தேர் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலானது சைவசமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும் , சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் கோயில் 5 வேலி, குளம் 5 வேலி, ஓடை 5 வேலி என நிலப்பரப்பினை கொண்ட இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்ச்சவராக தியாகராஜரும் இருந்து வருகிறது. இந்நிலையில் இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. பங்குனி உத்திர பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இந்த ஆழித்தேரோட்டமும், அதன் பின்னர் தெப்ப திருவிழாவும் நடைபெறுவது வழக்கம்.

இதையடுத்து கமலாம்பாள் ஆடிப்பூர உற்சவ பெருவிழாவானது ஆண்டுதோறும் கொடியேற்றதுடன் துவங்கி நடைபெறும் நிலையில் நடப்பாண்டிற்கான இந்த விழாவானது நேற்று முன்தினம் (29ம் தேதி) கொடியேற்ற நிகழ்ச்சி துவங்கியது. இந்நிலையில் அன்று முதல் கமலாம்பாள் வீதியுலா காட்சி, தினந்தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று கேடக உற்சவத்தில் அம்பாள் வீதியுலா காட்சிகள் நடைபெற்றது. இன்று இரவு மீண்டும் கேடக உற்சவத்திலும், நாளை (1ம் தேதி) இரவு இந்திரவிமானம், 2ம் தேதி பூதவாகனத்திலும், 3ம் தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 4ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும், 5ம் தேதி கைலாச வாகனத்திலும் என வீதியுலா காட்சிகள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கமலாம்பாள் தேரோட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 6ம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர் கட்டுமான பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஏற்பாடுகளை கோயிலின் பரம்பரை அறங்காவலர் ராம்விதியாகராஜன், உதவி ஆணையர்கள் ராணி மற்றும் ராமு, செயல் அலுவலர் அழகியமணாளன் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.