Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திம்மூர் கிராமத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம்

பாடாலூர், மே 21: தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் எழுத, படிக்க தெரியாதோருக்கு, அடிப்படை எழுத்தறிவு பயிற்சி வழங்க புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் கடந்த மே 3 ம் தேதி முதல் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2024-2025 கல்வியாண்டில்15 வயதிற்கு மேற்பட்ட கல்லாதவர்கள் கணக்கெடுப்பு பணி குடியிருப்பு வாரியாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நேற்று திம்மூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் (பொ) அருள்மொழி தலைமையில் பச்சையம்மன் கோயில் தெரு, கிழக்கு தெரு, மேற்கு தெரு, வடக்கு தெரு உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் 15 வயதிற்கு மேற்பட்ட கல்லாதவர்கள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

கணக்கெடுப்பில் சுமார் 30 பேர் கண்டறிந்து புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் படிவம் பூர்த்தி செய்தனர். இவர்களுக்கு எழுதப் படிக்க விரைவில் கற்றுத் தரப்படும் என தெரிவித்தனர். இதில் ஆசிரியர் பயிற்றுநர் அன்பரசு, பள்ளி ஆசிரியர்கள் ஜெயப்பிரகாஷ், சிகேந்திரன், முத்துசெல்வம், அருண்குமார், அனிதா இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் ஈடுபட்டிருந்தனர்.