உசிலம்பட்டி, ஜூலை 15: உசிலம்பட்டி நீதிமன்ற வளாகத்தில் திமுக வழக்கறிஞர் அணியினருக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதற்கு வழக்கறிஞர் அணி தலைவர் ஓ.செல்வராஜ் முன்னிலை வகித்தார். தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் எஸ்.சிவனேசன் தலைமையில், அரசு வழக்கறிஞர் ராஜசேகர், உசிலம்பட்டி வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளர் கனிராஜன், தலைவர் கரிகாலன் ஆகியோர் திமுக வழக்கறிஞர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினர். இந்நிகழ்வில் நிர்வாகிகள் ஆனந்த், விக்னேஷ், சுரேஷ்குமார், சதிஷ் ராஜன், அருண்பாண்டி, லலிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
+
Advertisement


