ஊத்தங்கரை, மார்ச் 13:ஊத்தங்கரை அருகே மிட்டப்பள்ளியில், திமுக மாவட்ட பொறியாளர் அணி சார்பில், முதல்வர் பிறந்தநாளையொட்டி தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் எக்கூர் செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் காந்தி வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சந்திரன், தெற்கு ஒன்றிய செயலாளர் ரஜினிசெல்வம், பேரூர் பொறுப்பாளர் தீபக், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், சத்தியநாராயணமூர்த்தி, சின்னதாய், தலைமை கழக பேச்சாளர் கந்திலி கரிகாலன் கலந்துகொண்டு பேசினர். இதில், கதிரவன், செந்தில், பொதுக்குழு உறுப்பினர் கோதண்டன், முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி, சிவமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
+
Advertisement


