சேந்தமங்கலம், ஜூன் 4: எருமப்பட்டி பேரூராட்சியில் திமுக சார்பில் மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் நேற்று வழங்கப்பட்டது. எருமப்பட்டி பேரூராட்சி திமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் திமுக தலைவர் கருணாநிதி 102வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பழனியாண்டி தலைமை வகித்தார். விழாவில், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம் கலந்து கொண்டு புதிய பஸ் நிலைய வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, திமுக கொடி ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதையடுத்து எருமப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், பென்சில், பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத்தலைவர் ரவி, பேரூராட்சி திமுக வார்டு கவுன்சிலர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
+
Advertisement


