சேந்தமங்கலம், ஏப்.4: சேந்தமங்கலம் ஒன்றியம் பேளுக்குறிச்சி பஸ் நிறுத்தம், காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி, சேந்தமங்கலம் பேரூராட்சி, எருமப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து நடிகர் போஸ் வெங்கட் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அவர் பேசுகையில், ‘10 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடி பொய்யை தவிர வேறு ஏதும் பேசவில்லை. தமிழகத்தில் காலை உணவு திட்டம் உலக நாடுகளே திரும்பிப் பார்க்கிற அளவிற்கு பெயர் பெற்றுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட போது வராமல் இருந்த மோடி, தற்போது தேர்தல் நேரம் என்பதால் தமிழகத்திற்கு ஓடி வருகிறார். 10 ஆண்டுகளில் டீசல், பெட்ரோல், காஸ் உள்ளிட்ட பொருட்களின் விலை மட்டுமே உயர்ந்துள்ளது’ என்றார். அப்போது, ஒன்றிய செயலாளர் அசோக்குமார், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி தலைவர் நல்லு ராஜேந்திரன், பேரூர் செயலாளர்கள் தனபாலன், முருகேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
+
Advertisement


