ஈரோடு, மே 5: ஈரோடு மாவட்டம் பெருந்துறை கிழக்கு ஒன்றிய மகளிர் அணி துணைத்தலைவி மலர்விழி தலைமையில், 50க்கும் மேற்பட்ட பெண்கள், முன்னாள் அமைச்சரும், ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருமான தோப்பு வெங்கடாச்சலம் தலைமையில் திமுகவில் நேற்று இணைந்தனர். நிகழ்விற்கு, பெருந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் சாமி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட திமுக அயலக அணி துணை அமைப்பாளர் பள்ளக்காட்டூர் ராஜேஷ் ஏற்பாடு செய்திருந்தார்.
+
Advertisement