திண்டுக்கல், ஏப். 9: குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் சார்பில் நாகல்நகர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொமுச பேரவை கவுன்சில் பொதுச் செயலாளர் அழகர்சாமி தலைமை வகித்தார். சி.ஏ.டி.யு செயலாளர் ஜெயசீலன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் பாலன், ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் முருகன், யுடியுசி மாவட்ட செயலாளர் தங்கப்பெருமாள், ஹெச்எம்எஸ் சங்கம் வில்லியம் உட்பட பலர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். உயர் பென்ஷன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்ப ஓய்வூதியத்தை வழங்க வேண்டும்.உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர், 1995ம் திட்டத்தில் ஓய்வூதியம் பெறுவர்க்கான பிரச்னைகள் குறித்து தீர்வு காண கோரி வருங்கால வைப்பு நிதி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.