Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தர்மபுரியில் புளி வணிகர்கள் நலச்சங்க வெள்ளி விழா

தர்மபுரி, மே 20: தர்மபுரி மாவட்ட புளி வணிகர்கள் நலச்சங்க 25ம் ஆண்டு வெள்ளி விழா கூட்டம் நேற்று நடைபெற்றது.விழாவிற்கு சங்கத்தின் நிறுவன தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாலக்கோடு அன்வர் பாஷா வரவேற்றார். புளி வணிகர்களின் தந்தை என்றழைக்கப்படும் முன்னாள் எம்எல்ஏ வடிவேல் கவுண்டர் உருவப்படத்திற்கு, மலர் தூவி மரியாதை செலுத்தினர். மாவட்ட செயலாளர் வினுபாஜ்ராஜ் தீர்மானங்களை வாசித்தார். பாப்பாரப்பட்டி பகுதி தலைவர் வள்ளி சின்னசாமி, பென்னாகரம் பகுதி தலைவர் சுப்பிரமணி, பாலக்கோடு பகுதி பீர்சா, மாரண்டஅள்ளி முரளி முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ சிங்காரம், மாநில விவசாய பிரிவு தலைவர் அன்பழகன், அமமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், பாஜ மாவட்ட தலைவர் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி மண்டல மேலாளர் குமரேசன், முதன்மை மேலாளர் சுபாகரன் ஆகியோர் பேசினர். தொடர்ந்து ₹50 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. விழாவில் நிர்வாகிகள் கணபதி, ராஜேந்திரன், நாகராஜ், அன்வர்பாஷா, அனிப், குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தர்மபுரி பகுதி தலைவர் பாபு நன்றி கூறினார்.