குளத்தூர், ஏப். 23: தருவைக்குளத்தில் புனித ஜெபமாலை ஆலய திருவிழாவையொட்டி பொதுமக்களுக்கு அசன விருந்து நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அடுத்த தருவைக்குளத்தில் புனித ஜெபமாலை ஆலய திருவிழா கடந்த வாரம் துவங்கியது. இதைத்தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை சிறப்பு திருப்பலி, ஜெபமாலை, ஆராதனை என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
திருவிழாவின் நிறைவாக நேற்றுமுன்தினம் காலை பங்குத்தந்தை பென்சிகர் தலைமையில் சிறப்பு திருப்பலி, ஆராதனை, கூட்டு ஜெபம் நடந்தது. இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு அசன விருந்து வழங்கினார். நிகழ்ச்சிகளில் கிறிஸ்தவர்கள் திரளாகப் பங்கேற்று ஜெபவழிபாடு மேற்கொண்டனர். ஏற்பாடுகளை பங்குதந்தை வின்சென்ட், ஆலய, கட்டளைதாரர்கள், அருட்சகோதரிகள் உள்ளிட்டோர் செய்திருந்தனர். கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.