Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தரமான மக்காச்சோள விதைகளை பயன்படுத்தினால் விவசாயிகள் அதிக மகசூல், கூடுதல் வருமானம் பெறலாம் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட வேளாண். அலுவலர்கள் ஆலோசனை

பெரம்பலூர், ஜூலை 7: இன்னும் 10நாட்களில் ஆடிப்பட்டம் தொடங்க உள்ளது. இந்நிலையில் தரமான மக்காச் சோள விதைகளை பயன் படுத்தினால் விவசாயிகள் அதிக விளைச்சலும் கூடு தல் வருமானமும் பெறலாம் என பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கான விதைப் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள் தயாமதி, ஆஷாலதா கூறியுள்ளனர்.இது குறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்திருப்பதா வது :

பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழி லாகக் கருதப்படுகிறது. சராசரி ஆண்டு மழை அளவு 861-மில்லி மீட்டர் பெறப்படுகிறது. மக்காச் சோளம் மற்றும் பருத்தி போன்ற பயிர்கள் பெரம்ப லூர் மாவட்டத்தின் மொத்த பயிர் பரப்பளவில் 80 சதவீ தம் இடம் பெறுகின்றன. மக்காச்சோளம் சாகுபடி யில் பெரம்பலூர் மாவட்டம் மாநிலஅளவில் முதலிடம் வகிக்கிறது. நீர் தேவை குறைவு என்பதாலும், அதிக மகசூல் திறன் கொண்ட பயிர் என்பதா லும், தானியங்களின் அரசி என்று அழைக்கப்படுகிறது.

ஆடிமாதமும், விவசாயமும் ஒன்றுடன் ஒன்று தொடர் புடையது. இன்னும் 10 நாட் களில் விதைப்புக்கு ஏற்ற ஆடிப்பட்டம் தொடங்கவுள் ளது. பெரம்பலூர் மாவட்டத் தில் ஆடிப்பட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி அதிக அளவில் செய்யப் படும். கடந்த ஆண்டு பெரம் பலூர் மாவட்டத்தில் மக்கா ச்சோளம் சாகுபடி, சுமார் 71 ஆயிரம் ஹெக்டேர் பரப்பள வில் சாகுபடி மேற்கொள்ள ப்பட்டது.தரமான மக்காச் சோள விதைகளைப் பயன்படுத் தினால்விவசாயிகள் அதிக விளைச்சலும், கூடுதல் வருமானமும் பெறலாம். மக்காச்சோளம் விதையின் முளைப்புத்திறன் 90 சதவீ தத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும். விதை கள் நன்கு திரட்சியாகவும் பதர் பூச்சிகள் மற்றும் நோய்க் கிருமிகள் அற்று இருத்தல் அவசியம். மக் காச்சோளம் விதையின் குறைந்தபட்ச ஈரப்பதம் 12 சதவீதமாகவும், புறத் தூய்மை 98சதவீதமாகவும் இருக்க வேண்டும்.

பெரம்பலூர் மற்றும் அரிய லூர் மாவட்டங்களுக்கான விதைப் பரிசோதனை நிலையமானது, பெரம்ப லூர் புது பஸ்டாண்டு தென் புறம், மாவட்ட மைய நூலகம் மேல்புறம், துறை மங்கலம்- 621 220 என்ற முகவரியில் செயல்படுகி றது. இந்த விதைப் பரிசோ தனை நிலையத்தில் விதையின் தரநிர்ணய காரணிகளான, முளைப்புத் திறன், புறத்தூய்மை, ஈரப் பதம் மற்றும் பூச்சித் தாக்கு தல் போன்ற பரிசோதனை செய்யப்படுகின்றன.

ஒரு பணிவிதை மாதிரிக்கு ரூபாய் 80 பரிசோதனைக் கட்டணமாகசெலுத்தி, பயிர் மற்றும் இரகம், குவியல் எண் ஆகியவை குறித்த விபரச் சீட்டுகளுடன் மக் காச்சோளம் விதைகள் 500 கிராமை அனுப்பி, விதை யின் தரத்தை அறிந்து கொள்ளலாம் என பெரம்ப லூர்- அரியலூர் மாவட்டங் களுக்கான விதைப் பரி சோதனை நிலையத்தின் வேளாண்மைஅலுவலர்கள் தயாநிதி மற்றும் ஆஷா லதா ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளனர்.