Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தடுப்பணை, குளங்கள் நிரம்பி வருகிறது: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

தோகைமலை, ஜூன் 9: தோகைமலை, கடவூர் ஒன்றிய பகுதிகளில் கணிசமான மழை பெய்ததால் தடுப்பணைகள், குளம் நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்யாமல் கடுமையான வெயில் தாக்கம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி அன்று கடவூர் ஒன்றிய பகுதிகளான வடவம்பாடி, பாப்பையம்பாடி, வெள்ளப்பட்டி போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதேபோல் கடந்த மே மாதம் 5ம் தேதி அன்று கடவூர், தரகம்பட்டி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் கடுமையாக ஏற்பட்டு வெப்ப அலைகள் வீசியதில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த மே மாதம் 10ம் தேதி அன்று கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் சாரல் மழையும், சில பகுதிகளில் பலத்த மழையும் பெய்து வருகிறது. கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய சுற்றுவட்டார பகுதிகளில் சித்திரை மாத வெயில் தாக்கம் கடுமையாக ஏற்பட்டு வெப்ப அலைகள் மூலம் பொதுமக்கள் கடும் சிறமத்திற்கு ஆளாகி வந்தனர். இதேபோல் நீண்ட நாட்களாக மழை பெய்யாமல் வறட்சி ஏற்பட்டு வந்ததால் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடுகள் ஏற்படும் அபாய நிலையும் உருவாகி வந்தது. இதனை அடுத்து மாவட்ட நிர்வாகம் குடிநீர் தேவைகளை, தட்டுபாடுகள் இல்லாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பணிகளையும் மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களில் அவ்வப்போது கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது. இந்த மழைக்கு ஆற்றுவாரிகளில் அமைக்கப்பட்டு உள்ள தடுப்பனைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதேபோல் பல்வேறு பகுதிகளில் உள்ள தடுப்பனைகள் நிறைந்து உபரிநீர் வெளியேறி சிறு குளங்களுக்கு சென்று மழை நீர் தேங்கி நிற்கிறது. இதேபோல் மத்தகிரி ஊராட்சி மன்ற தலைவர் தங்காரஜ் சீரிய முயற்சியால் மத்தகிரி ஊராட்சியில் உள்ள அரசுக்கு சொந்தமான காமாநாயக்கர் குளத்தை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வந்தார். கரூர் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.11 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பீட்டில் மதகு அமைத்தல், கரை பலப்படுத்துதல் மற்றும் தூர் வாரும் பணிகள் தொடங்கப்பட்டது.

சுமார் 7 ஏக்கர் கொண்ட அரசுக்கு சொந்தமான காமாநாயக்கர் குளத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால் சுமார் 20 ஏக்கர் பாசன நிலங்களுக்கு நேரடியாகவும், சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட கிணற்று பாசனங்ளுக்கும் நீர் பாசனம் வழங்கி வருகிறது. மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது. இதனால் மேற்படி குளத்தை தூர்வாரிய பின்பு மழை பெய்து உள்ளநிலையில் தற்போது குளம்நிரம்பி வருகிறது. இதனை அடுத்து கடுமையான வெப்பம் தனிந்து குளிர்ச்சி ஏற்பட தொடங்கி உள்ளதோடு, குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலையும் மாறி உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.