Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தஞ்சை மாவட்டத்தில் 1228 பள்ளிகளில் தமிழக முதல்வரின் மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி தஞ்சையில் மூன்று இடங்களில் போராட்டம்

தஞ்சாவூர், ஆக. 14: மூன்று குற்றவியல் சட்டங்களையும், தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளையும் ஒன்றிய அரசு திரும்ப பெறக் கோரி அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் தஞ்சையில் மூன்று இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

ஒன்றிய அரசு கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் மூன்று குற்றவியல் சட்டங்களை நடைமுறைப் படுத்தியுள்ளது. இந்த சட்டங்கள் மக்களுக்கு எதிரான சட்டமாகும். ஏற்கனவே, ஆங்கிலத்திலும், அந்தந்த தாய் மொழியிலும் இருந்து வந்த குற்றவியல் சட்டங்களை சமஸ்கிருத மொழியில், காவல்துறைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கின்ற வகையில் சட்டங்களை இயற்றி உள்ளது. இதே போல போராடி பெற்ற 44 தொழிலாளர் சட்டங்கள் நான்கு தொகுப்பாக கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, மக்களுக்கு எதிரான மூன்று குற்றவியல் சட்டங்களையும், தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்ட தொகுப்பாளையும் ஒன்றிய மோடி அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய பரப்புரை இயக்கம் தஞ்சையில் நேற்று காலை நடைபெற்றது. கரந்தை, நிக்கல்சன் வங்கி, கீழவாசல் காமராஜர் சிலை ஆகிய மூன்று இடங்களில் பரப்புரை இயக்கம் நடைபெற்றது. இந்த இயக்கத்திற்கு தொமுச மாவட்ட செயலாளர் கு.சேவியர், எஐடியூசி மாநில செயலாளர் ஆர்.தில்லைவனம், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, ஐஎன்டியூசி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், ஏ ஐ சி சி டி யூ மாவட்ட செயலாளர் கே. ராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இயக்கத்தில் அனைத்து சங்க நிர்வாகிகள் பாஸ்டின், கே.டிகாளிமுத்து, சேவையா, துரை.மதிவாணன், கோடீஸ்வரன், முத்துக்குமரன், பி.செல்வராஜ், மூர்த்தி, மணிமாறன், ரவிச்சந்திரன், முத்துக் கிருஷ்ணன், மணிவாசகம், ஜெயபால், நடராஜன், அழகு தியாகராஜன், விசிறி சாமியார் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.