தஞ்சாவூர், டிச. 10: தஞ்சை விளார் சாலை மாரிக்குளம் சுடுகாடு அருகே நேற்று முன்தினம் மது விற்பனை நடைபெறுவதாக தஞ்சை தெற்கு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் தஞ்சை மாரிக்குளம் கீழக்கரை அன்புநகரை சேர்ந்த பிரபாகரன்(37) என்பதும், இவர் மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரிடம் இருந்த 28 பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன் பிரபாகரனை கைது செய்தனர்.
+
Advertisement


