தஞ்சாவூர் ராஜப்பா பூங்காவில் மக்கள் கூட்டம்: கல்லணை மணற்போக்கி வழியாக 2,166 கன அடி மழைநீர் செல்கிறது
திருக்காட்டுப்பள்ளி, மே 24: கல்லணை கொள்ளிடம் மணற்போக்கியில் 2,166 கன அடி மழைநீர் செல்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே கரிகாலன் கட்டிய கல்லணை உள்ளது. சுற்றுலா தலமாகவும் உள்ளதால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்ததாலும் காவிரியில் தண்ணீர் இல்லாததாலும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்திருந்தது. இதனால் கரிகாலன் பூங்கா, சிறுவர் பூங்கா ஆகிய பகுதிகளில் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.
இதனால் அங்குள்ள மீன் விற்போர், ஐஸ் மற்றும் பலகாரங்கள் விற்பனையும் வியாபாரிகள் வியாபாரம் இல்லாமல் தவித்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்வதால் பூமி குளிச்சியடைந்தது. பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகள், மற்ற மாவட்டங்களில் பெய்யும் மழையும், பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழைநீர் அனைத்தும் காவியாற்றின் வழியாகவும், முக்கொம்பு என்னும் மேலணை வழியாகவும் மழைநீர் வந்து கல்லணை கொள்ளிடம் மணற்போக்கியில் நேற்று 2,166 கன அடி மழைநீர் செல்கின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.