Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் பொது தகவல் அலுவலர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி கூட்டம்

தஞ்சாவூர், மே 24: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு தகவல் உரிமை சட்ட ஆணையர் செல்வராஜ் தலைமையில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் முன்னிலையில் பொது தகவல் அலுவலர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் நேற்று நடைபெற்றது.

இப்பயிற்சி கூட்டத்தில், தமிழ்நாடு தகவல் உரிமை சட்ட ஆணையர் செல்வராஜ் தெரிவித்ததாவது:தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து பொதுத் தகவல் அலுவலர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய முறையில் உரிய காலத்தில் தகவல் அளித்திடும் வழிமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக தகவல் பெறுபவரின் வரையறைகள், தகவல் பெறும் வகை முறைகள், பொது அதிகார அமைப்பின் கடமைகள் மற்றும் பொறுப்புகள், பொது தகவல் அலுவலர்கள் நியமித்தல் மற்றும் அதிகாரங்கள், மனுதாரர் தகவல் பெறுவதற்கான வழிமுறைகள், கோரிக்கை தீர்வு செய்தல் போன்ற பல்வேறு கருத்துக்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. மேலும், சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழப்பட்ட கேள்விகளுக்கு பதில் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சரவணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.