காரிமங்கலம், ஜூன் 7: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் கோடாலம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(40). தனியார் பஸ் டிரைவரான இவருக்கும், அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த மோகன்(34) என்பவருக்கும் மது குடிக்க சென்ற இடத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மோகன் வழக்கம்போல், சுரேஷிடம் மது வாங்கி தர வற்புறுத்தி உள்ளார். அதற்கு அவர் மறுக்கவே மோகன் தகாத வார்த்தையால் திட்டி உள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மோகன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டார். இதில், தலையில் படுகாயமடைந்த சுரேஷ் கொடுத்த புகாரின்பேரில், காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து மோகனை கைது செய்தனர்.
+
Advertisement


